Wednesday, May 25, 2016

சுந்தரம் 60 (1-June-2016)



(மெட்டு:அழகென்ற சொல்லுக்கு முருகா)

Sundaram can't hide anything... including the beauty of his pure heart.I salute his parents to have aptly chosen One name for both viz.. the person and his heart. True to his name, he has a beautiful heart. I treasure his friendship as a gift from God.I will sure be writing similar wishes for your Sadhabhishegam. May God bless you with whatever you need Sundaram..!

நண்பா.. நண்பா
(MUSIC)
அழகென்ற பேர்கொண்ட நண்பா

அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும்அதுதானே  நண்பா
(2)
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
இடர்-போக்க  சொந்தமாய்  அன்பாய் 
வரும் உன்னைப்-போல் காண்பது கஷ்டமே -நண்பா 
(2)
சலிக்காமல் உதவும்-என் நண்பா (2)
உன் பிரியாத நட்பு-என் பாக்யமே நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
வேண்டாதோர் என்ற-பேர் உண்டா
உந்தன் நெஞ்சிலோர் பேதமே இல்லையே நண்பா
(2)
பகை-நீ  என்றுனை  நண்பா (2)
சொல்லப் பகை-கூட  நில்லாது உன்னெதிர் நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும் அதுதானே  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
சொன்னாலும்  முடியாது நண்பா
நட்பின் பெருமையைச் சொல்லாமல் விடுவதும்-அழகா
(2)
இன்று-இலை  நேற்றிலை  நண்பா (2)
முடிவு  நட்புக்கு கிடையாது என்றைக்குமே  நண்பா 
  அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
முதலில்-பெரும்  ஐஸ்வரியம் பெண்ணாய் 
பின் மணியாக மகனாகக் கொண்டனை நண்பா
(2)
சித்திரா உன்னுடன் நின்றாள்
சக்தியாய் சித்திரா நின்றாள்
இன்னும் பல்-நலம் பெற்று-நீ வாழுவாய் நண்பா
  அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
அறுபத்தில் குழவி-நீ நண்பா
உந்தன் மனதுக்கு வயது தான் இல்லையே நண்பா
(2)
நல்-வாழ்த்துப்  பாடுவேன்  நண்பா
நான் வாழ்த்திப் பாடுவேன் நண்பா
என்றும் என்மிழ்க் கவியிலே இனிதாக  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும்  அதுதானே  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
நண்பா.. நண்பா.. நண்பா




Sunday, May 8, 2016

ஜெயஸ்ரீ கண்ணன் தம்பதிகள் சஷ்டியப்த பூர்த்தி – 8/May/2016




                                   ஸ்ரீதரன்

(Click here for some more photos )



(மெட்டு : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ )
ஆஆ …. ஆஆ ..

என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
(2)
(MUSIC)
உன்-கைப் பிடித்தது..வோ-ஜெ..யஸ்ரீ ராகத்தில் பிடித்ததுவோ-பாகேஸ்ரீ
உன்மனம் கவர்ந்தது ஜெய-பாகே-ஸ்ரீ எனக்-கவி படித்தேன் நான்-*பாகேஸ்ரீ
என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
ஆஆ …. ஆஆ ..

எந்நேர..மும்-உனக்கு இறை-நாட்டமே
 நாளும்-பூஜை புனஸ்காரமே 
(2)
உன்னில்-காணும் பணிவினாலே 
உன்னில்-காணும் பண்பினாலே 
 கூடும் ஞானம் தன்னாலே (2)
என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
ஆஆ …. ஆஆ ..

அறுபது ஞானப் பசி-கூட்டுமே 
உன்ஜபம் உணவூட்டுமே
(2)
** பூஜை..யால்-உயர்..வானவன்-நீயே
இனிமையே இனி எந்நாளும்
*** பூஜையால்-உயர் வாழ்பவன் நீயே
புனிதமே இனி எந்நாளும்

என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
(2)



பாகேஸ்ரீ ராகம் குருவின் கடாக்ஷத்தைப் பெறுவதற்கு (ஜெயிப்பதற்கு)  உதவி செய்கிறது எனவே அது ஜெய ஸ்ரீ என்றும் ஆகிறது.

**  தினம்  செய்யும் பூஜா பலனினால் தேவனைப் போலத் திகழ்பவன்.
  வானவன் = தேவன்

*** எப்பொழுதும் பூஜை ஜபம் என்று எண்ணங்களை உயரச் செலுத்தி வாழ்பவன்.  
____________________