Sunday, May 8, 2016

ஜெயஸ்ரீ கண்ணன் தம்பதிகள் சஷ்டியப்த பூர்த்தி – 8/May/2016




                                   ஸ்ரீதரன்

(Click here for some more photos )



(மெட்டு : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ )
ஆஆ …. ஆஆ ..

என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
(2)
(MUSIC)
உன்-கைப் பிடித்தது..வோ-ஜெ..யஸ்ரீ ராகத்தில் பிடித்ததுவோ-பாகேஸ்ரீ
உன்மனம் கவர்ந்தது ஜெய-பாகே-ஸ்ரீ எனக்-கவி படித்தேன் நான்-*பாகேஸ்ரீ
என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
ஆஆ …. ஆஆ ..

எந்நேர..மும்-உனக்கு இறை-நாட்டமே
 நாளும்-பூஜை புனஸ்காரமே 
(2)
உன்னில்-காணும் பணிவினாலே 
உன்னில்-காணும் பண்பினாலே 
 கூடும் ஞானம் தன்னாலே (2)
என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
ஆஆ …. ஆஆ ..

அறுபது ஞானப் பசி-கூட்டுமே 
உன்ஜபம் உணவூட்டுமே
(2)
** பூஜை..யால்-உயர்..வானவன்-நீயே
இனிமையே இனி எந்நாளும்
*** பூஜையால்-உயர் வாழ்பவன் நீயே
புனிதமே இனி எந்நாளும்

என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
(2)



பாகேஸ்ரீ ராகம் குருவின் கடாக்ஷத்தைப் பெறுவதற்கு (ஜெயிப்பதற்கு)  உதவி செய்கிறது எனவே அது ஜெய ஸ்ரீ என்றும் ஆகிறது.

**  தினம்  செய்யும் பூஜா பலனினால் தேவனைப் போலத் திகழ்பவன்.
  வானவன் = தேவன்

*** எப்பொழுதும் பூஜை ஜபம் என்று எண்ணங்களை உயரச் செலுத்தி வாழ்பவன்.  
____________________

No comments:

Post a Comment